Pages

Tuesday, August 26, 2014

இயற்பியல், வணிகவியல், பொருளியல் பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.


அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது.

இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.