Pages

Tuesday, August 26, 2014

இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கீடு

அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும், தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.


அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே ஆண்டுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்-1விற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம் , வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

இத்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சேர வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதற்கான விவரங்களை பள்ளிக் கல்வித்துறைக்கு சி.இ.ஓ., அலுவலகங்கள் அனுப்பியது. ஆனாலும், அந்தந்த கல்வியாண்டிற்குரிய தொகை மாணவர்களுக்கு கணக்கில் செலுத்தாமல் தாமதமானது.

இந்நிலையில், மீண்டும் மாணவர்களின் வங்கி கணக்கு புள்ளிவிவரம் சேகரித்த நிலையில், 2013-14 கல்வியாண்டு வரை 3 ஆண்டுக்குரிய கல்வி ஊக்கத்தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுக்கு வட்டியோடு சேர்த்து, தகுதியான ஒவ்வொரு மாணவருக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.