டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா உளுந்தாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிவானந்தராஜாவும், இளநிலை பட்டதாரி ஆசிரியராக விமலாவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுடைய வருகை பதிவேட்டில் விமலாவின் பெயர் முதலாகவும், சிவானந்தராஜாவின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், டி.இ.ஓ., மதிவாணன், கடந்த மாதம் 4ம் தேதி பள்ளி வந்து விசாரித்து, சீனியாரிட்டி அடிப்படையில் வருகை பதிவேடு எழுதும்படி தலைமை ஆசிரியர் அருள்மொழியிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் டி.இ.ஓ., உத்தரவை மதித்து, சீனியாரிட்டி முறையை கடைபிடிக்காததால், தலைமை ஆசிரியர் அருள்மொழியை சஸ்பெண்ட் செய்து டி.இ.ஓ., மதிவாணன் உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்கள், நேற்று பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடையே பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஏ.இ.ஓ., செலின்மேரி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
middle school"s are not having P.G.Teacher it is truly money make dicesion .It"s a bad example for teacher"s
ReplyDeleteMuthu nilai enbathu p g teacher alla muthukalai enbathuthan pg
Deletesivanatharaja is frude Not co operation with teachers
ReplyDeleteFruda irruntha junior i muthaleium, senior i junioruku pinnadi attendence la eluthanunu rule irruka- Uduma
ReplyDeleteThis insident froof who is fraud
ReplyDeletespellinga correcta parunga sir!
ReplyDeleteதிரு.சிவானந்தராஜா எங்கிருந்தாலும் அங்கு பிரச்சனைகளும் இருக்கும் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். ஜூனியர் பெயர் சீனியருக்குப் பின்னால்தான் வரும் என்பது யாருக்கும் தெரிந்தது தான். இவ் விஷயத்தில் தலைமையாசிரியருக்கு மெமோ கொடுத்திருக்கலாம் அல்லது பணி மாறுதல் கூட செய்திருக்கலாம். ஆனால், தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். நிர்வாக ரீதியாக மன்னிக்க முடியாத தவறுகளை செய்துள்ளவர்களை இவர்கள் தண்டித்தா விட்டார்கள். விருத்தாசலம் ஊர்க்காவல் படையில் இருந்து கொண்டு திரு.சிவானந்தராஜா எத்தனை ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் மிரட்டியுள்ளார் என்பது உளுந்தூர்பேட்டை பகுதி ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும். வட்டிக்கு விடுவதும், 'கவனிக்க வேண்டியவர்களை' கவனித்து சொகுசாக இருப்பதும், இவரால் ஆதாயம் பெற்றவர்கள், இவருக்கு எதிரானவர்களை பந்தாடுவதும் புதிதல்ல. ஆசிரியர்களின் போராட்டங்கள் நடந்தபோது பள்ளியில் சிறப்பாக(?) பணியாற்றி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் பேட்டியளித்த புண்ணியவான் இவர். இன்றைய செய்தியின்படி, திரு.சிவானந்தராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. பள்ளி பிரச்சனையினை சரியான முறையில் கையாளத் தெரியாமல் 'சந்தி' சிரிக்க வைத்து விட்ட அதிகாரிகளை அரசு என்ன செய்யும்?. உளுந்தாண்டார்கோவில் பள்ளி பல சாதனைகளுக்கு சொந்தமான பள்ளி. இன்று சோதனைகளை சந்திக்கும் அவல நிலையில் உள்ளது. இப்படி இருந்தால் பொது மக்கள் மத்தியில் ஆசிரியர்களின் மதிப்பு எப்படி உயரும். இப்படிக்கு: 'ஆசிரியர் சமுதாயம் நன்றாய் இருக்க உழைப்போர் சங்கம்', விழுப்புரம்.
ReplyDelete