மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றுள்ளது. சமீபத்தில், சுதந்திர தின விழாவின்போது உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'பள்ளிகளில் மாணவியருக்கென தனி கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்நிலையில், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., சின், தலைமை செயல் நிர்வாகி சந்திரசேகரன் கூறியதாவது: நம் நாட்டில், ஏராளமான பள்ளிகளில் மாணவியருக்கென தனியாக கழிப்பறை இல்லை. இது, வருந்தத்தக்க விஷயம். இதற்காக, மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம். பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறை அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு, எங்கள் நிறுவனமும் சிறிய பங்காற்ற விரும்புகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 10 ஆயிரம் பள்ளிகளில், மாணவியருக்கென தனியாக கழிப்பறை அமைப்பதற்கு, 100 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.