2013-ஆசிரியர் தகுதித் தேர்வில் 90- மதிப்பெண் மேல் பெற்ற எங்களுக்கு உயிர்(உரிமை) வேண்டும்! தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான வேண்டுகோள்.
*ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப்போல் தகுதிதேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்:
Weightage என்பது +2 மதிப்பெண்ணை = 10 eg(730/1200)=60%x10/100= 6
B,SC/B.A மதிப்பெண்ணை =15
B,ED மதிப்பெண்ணை =15
தகுதிதேர்வு மதிப்பெண்ணை =60
மொத்தம் =100 என கணக்கிடுவது.
1.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் TNPSC,TRB & CTET,UPSC போன்ற தேர்வுகளுக்கு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.
2.+2, B.SC / B.A , B.ED ஆகிய படிப்பானது பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த மதிப்பெண் மிக குறைவு [மதிப்பிடு முறை] ஆனால் தற்போழுது எடுக்கும் மதிப்பெண் மிக ஆதிகம்,ஓவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் படித்துள்ளனர்.
3.+2 VOCATIONAL பிரிவில் செய்முறை தேர்வில் 440 மதிப்பெண் பெறும் அவர்கள் சராசரியாக தேர்ச்சி பெற்றாலே 900 மதிப்பெண் பெறுகின்றனர்.அவர்களுக்கு இணையாக மற்ற +2 பாட பிரிவு பயின்றவர்களை கருதகூடாது.
4. 10-15 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் தருவாயில்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி [90 மதிப்பெண்] பெற்றால் தான் வேலை என்ற அரசின் அறிவிப்பால் அத்தேர்வினையும் எழுதி 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும் வேலை கிடைக்கும் என எதிர்பாப்த்து Weightage காரணமாக வேலை கிடைக்காமல் வாடுகிறோம்.
[அல்லது]
*தேர்வு நடத்துவதற்கு முன் உள்ள விதிமுறைகளே அந்த தேர்வின் முடிவிற்கு பொருந்தும் எனவே 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் மேல் (60 %) பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
காரணம்:
1.[TET] ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் 90 என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆகஸ்ட் 2013 ல் தகுதித் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிநியமனம் வழங்கும் தருணத்தில் மதிப்பெண்ணில் 5 % சலுகை [82 மதிப்பெண்] வழங்கப்பட்டது.
2. மதிப்பெண்ணில் 5 % சலுகை [82 மதிப்பெண்] வழங்கப்பட்டது அரசின் கொள்கை முடிவு ஆனால் அவர்களுடன் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களையும் சேர்த்து தேர்வு செய்வதால் 90 மதிப்பெண் மேல் உள்ளவர்கள் வேலையை இழக்கின்றனர்.
3.இதுபோன்ற 5 % மதிப்பெண் தளர்வு மற்றும் புதிய Weightage முறையால் 90 மதிப்பெண் மேல் பெற்றும் வேலையை இழப்பது நியாயமா?
4.இனிமேல் +2 , B.SC / B.A , B.ED தேர்வு எழுதி ஆதிக மதிப்பெண் பெறமுடியாது, எனவே எங்கள் வாழ்வும் சாவும் உஙகள் முடிவில்.
தகுதியை பெற்று உரிமை கேட்கிறோம்,
உயிர் பிச்சைக்கொடுங்கள்.
Tamil
ReplyDeletemy dob 31/07/1962 tet mark 95 wt 58.8 history not selected. employment seniority from 1991 march. i had attended cv in 2010 in dmk government. but selection date is 30/06/1990. if seniority based i will selected this time. so wt is a worng.
ReplyDeletewhy didnt you went to the court as soon as they announced the weightage calculation
ReplyDeleteall your points are valid. if u had gone to the court.it might have been solved.
ReplyDeleteAnnan manaiviyai thambikku thirumanam seivathai udane thaduthu niruthungl.(paniyum manaiviyum ondru thane!)
ReplyDeleteSuperb points pls go to the court solved ur problem sir we will meet on the court do well all the best do soon
ReplyDelete