Pages

Friday, August 22, 2014

நியாயமான போராட்டங்களுக்கு நடவடிக்கை கூடாது: தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி

முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம், என தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தேசிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


காரைக்குடியில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி திட்டம் 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டுக்குள் அனைத்து குழந்தைகளையும், பள்ளியில் சேர்க்க வேண்டும், இடைநிற்றல் இன்றி தரமான இலவச கட்டாய கல்வி தர வேண்டும் என்பது நோக்கமாகும்.

2015-க்குள் இத்திட்டம் நிறைவேற வாய்ப்பு இல்லை. 188 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டதும், 334 சங்கங்கள் ஒருங்கிணைந்த அமைப்பானது, பெல்ஜியத்தில் உள்ளது. இந்த அமைப்பு 2030-க்குள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும், என்ற திட்டத்தை வகுத்து, அதன் விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உறுதி பூண்டுள்ளது.

அதன் அடிப்படையில், அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி இத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் செப்.5-ம் தேதி டில்லியில் கருத்தாய்வு கூட்டம், 18-ம் தேதி உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், 19-ம் தேதி ஊர்வலம் நடக்க உள்ளது. இதில், இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 2030-ல் அனைவருக்கும் கல்வி கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். தனியார் பள்ளிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களை பாடம் நடத்த வைக்கின்றனர்.

இந்தியாவிலேயே உத்தரபிரதேசத்தில், அதிக அளவாக 80 ஆயிரம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம். அறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தினால் தண்டனை என்று அறிவிப்பதை விட, அந்த சூழல் வராமல் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.