Pages

Monday, August 18, 2014

பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் ஒரு புதிய பயன்பாடு

தொடர்ந்து பெற்றோர்களின் தொலைபேசி அழைப்புகளைப் புறக்கணிக்கும் பிள்ளைகள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் ஒரு புதிய பயன்பாடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகள் இதனைத் தொல்லையாக நினைத்தாலும் பெற்றோருக்கு இந்தத் தகவல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கக்கூடும் என்பது இதனை அறிமுகப்படுத்தும் ஷரோன் ஸ்டான்டிபர்டின் கணிப்பாகும். 


'இக்னோர் நோ மோர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயன்பாட்டினைப் பெற்றோர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களிலும், பிள்ளைகளின் போன்களிலும் இணைக்கவேண்டும். இதற்கென ஒரு பாஸ்வேர்ட் பெற்றோருக்குக் கொடுக்கப்படும். பெற்றோர்கள் அழைத்து பிள்ளைகள் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களுடைய போன் தொடர்பு துண்டிக்கப்படும். இதனால் தங்களுடைய போனின் இணைப்பைப் பெற அவர்கள் கட்டாயம் பெற்றோரை அழைத்ததாக வேண்டும். 

பெற்றோரின் ஈமெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவை இருந்தால்தான் இந்தப் பயன்பாட்டைத் துண்டிக்கமுடியும் என்பதால் பிள்ளைகளால் தன்னிச்சையாக இந்தப் பயன்பாட்டைத் துண்டிக்கமுடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும். அவ்வாறு அவர்கள் ஏதேனும் முயற்சி செய்தால் தானாகவே தொடர்பு பூட்டப்பட்டு பெற்றோருக்கு ஈமெயில் தகவலும் அனுப்பப்படும். 

1.99 டாலர் விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பயன்பாட்டின் ஐபோன் பதிப்பின் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ள ஸ்டான்டிபர்ட் விரைவில் அதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.