ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு காலி பணியிடங்கள், தற்சமய காலி பணியிடங்கள், ஆதி திராவிட மற்றும் நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்கள், சிறுபான்மை மொழி காலி பணியிடங்கள் என்று மொத்தம் 2582 காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பப்படும். தாள் இரண்டுக்கு வெளியிடப்பட்டதை போல இல்லாமல் ஒரு முழுமையான அளவில் தாள் ஓன்றுக்கான அறிவிப்பு உள்ளது.
விரைவில் தாள் ஒன்றுக்கு தேர்வானவர்கள் தேர்வு பட்டியல் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு 2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள்-1) தேர்ச்சி பெற்ற 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 6-ந் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், காலியிடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை. இதனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட போகிறதோ? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். 4 ஆயிரம் இடங்கள் அளவுக்கு காலியிடங்கள் இருக்கும் என பல்வேறு யூகங்கள் எழுந்து வந்தன. 2,582 காலியிடங்கள் அறிவிப்பு இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. காலியிடங்கள் விவரம் வருமாறு:- ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் - 669, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 64, சிறுபான்மை மொழி - 174, பொதுவான அரசு பள்ளிகள் - 1,675 ஆக மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நிரப்பப்பட உள்ளது. வெயிட்டேஜ் மார்க் என்பது பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகிய மதிப்பெண்களின் வெவ்வேறு விகிதாச்சாரத்திலான தொகுப்பு மதிப்பெண் ஆகும். தற்போது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் விரைவில் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2,582 காலியிடங்களுக்கு 31,500 பேர் போட்டிபோடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
paper 1 ku epa selection list varum any news
ReplyDeleteAll expected cutoffs are broken. New cutoff may be BC 76. Mbc 75. because of low vacancy position. BC only 220. Mbc. 166.
ReplyDeleteI have completed my D.T.Ed in 2003. Last ten I am trying to get this holy Govt job. I attended c.v two times before T.E.T. now I worked hard and passed with 94 marks. Cut off 67.18. B.c. when I was studying 12, my family condition is very poor. So that I can't score more. But D.T.Ed I scored more. Now what should I do ??????? I prayed lot.... But ?????
ReplyDeleteDont loss your hope. U definitely get govt job. Last day news now FALSE. Today news FALSE tomorrow. All cut off will change the next day.
Deletelast year 9000 posting sir
ReplyDelete