Pages

Wednesday, August 27, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.


அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

7 comments:

  1. Please tell me Howmany candidates have passed in paper 2 (Above 90)

    ReplyDelete
  2. Please teell me howmany candidates have passed in paper 2 (above 90 candidates)

    ReplyDelete
  3. Waitage oliga oliga , employment seniority valga valga

    ReplyDelete
  4. Porattam vetripera valththukkal , waitage murai oliga oliga , TET & employment seniority murai valga valga valga , ( AMMA ) kadavul kandippaga kappatruvargal

    ReplyDelete
  5. ம்ம் நியாயமான கோரிக்கை. ஆசிரியர் பணி நியமனம் தகுதித்தேர்வின் மூலம் செய்யப்படுகிறது என்றால் TET ல் பெற்ற மதிப்பெண் தான் முதன்மை பெறுகிறது. 10ம்,12ம் வகுப்பு, இளங்கலை மற்றும் கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் சதவீதம் பெற்றவர்கள் ஏன் TET ல் அதிக மதிப்பெண் பெற இயலவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் தமிழ், அங்கிலம், ((கணிதம்/அறிவியல்)அ(சமூக அறிவியல்)), மற்றும் உளவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. இந்த பாடங்கள் அனைத்தும் 10ம்,12ம் வகுப்பு, இளங்கலை மற்றும் கல்வியியல் பட்ட படிப்புகளுடன் முற்றிலும் தொடர்புடையவை. ஒரு ஆசிரியரின் அனைத்து பாட திறமைகளையும் ஆராயும் களமாக TET தேர்வு விளங்குகிறது என்பது தான் உன்மை. எனவே இந்த வெய்ட்டேஜ் முறை கைவிடப்பட்டால் மிக நன்று, மேலும் இந்த வெய்ட்டேஜ் முறை எதிர்காலத்தில் குழப்பத்தை விளைவிக்க கூடியது அதாவது 12ம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்ட படிப்பில் குறைந்த மதிப்பெண் சதவீதம் உடையவர்கள் கல்வியியல் பட்ட படிப்பை தொடர அச்சம் அடையலாம் எனெனில் அவர்கள் TET தேர்வில் அதிக மதிப்பெண்னை இலக்காக அடைய வேண்டி இருக்கும். ஆனால் கல்வியியல் பல்கலைக்கழகம் கல்வியியல் பட்டம் பயில்வதற்கான தகுதியாக இளங்கலை பட்டத்தில் மிக குறைந்த மதிப்பெண் சதவீதத்தையே நிர்ணயித்துள்ளது. மதிப்பெண் சதவீத வேறுபாட்டிற்கு ஆண்டுதொரும் கல்விமுறையில் ஏற்படும் மாற்றமும் முக்கிய ஒரு காரணியாகிறது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளகூடிய உன்மைதானே !

    ReplyDelete
  6. Ungal porattam vetri adaiya vazhthukkal,
    ungal pakkam niyayam irukirathu enral nichayam neengal vetri peruveergal,
    ithu pontra kodumai entha oru asiriyarukkum izhaikkapada koodathu, thodarnthu ara vazhiyil poradungal

    ReplyDelete
  7. Ungal porattam vetri adaiya vazhthukkal,
    ungal pakkam niyayam irukirathu enral nichayam neengal vetri peruveergal,
    ithu pontra kodumai entha oru asiriyarukkum izhaikkapada koodathu, thodarnthu ara vazhiyil poradungal

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.