Pages

Thursday, July 24, 2014

CPS-ன் அவலம் பாரீர்

2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில் பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில் மனைவி இறப்பும் நிகழ்ந்தது.
75சதம் மாற்று திறனாளியான இவர் பணி நிறைவு பெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னும் எந்த வித பணப்பலனுமின்றி தவித்து வருகிறார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இது. இதே நிலை தான் நாளை நமக்கும்... அவருக்கு பிடித்த பணமாவது கிடைத்தால் போதும் எஞ்சிய நாட்களை நகர்த்த என்ற நிலை உள்ளது. அவருக்கு அந்த பணப்பலன் கிடைக்க ஆசிரிய சமூகம் உதவ முன்வருமா?

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.