Pages

Thursday, July 24, 2014

மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பு

பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.


ஜம்கண்டி தாலுகாவில் நிருபர்களிடம் முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது: பள்ளி வளாகத்தில் பிள்ளைகளை எச்சரிக்கையுடன் பார்த்து கொள்வது, பள்ளி நிர்வாகத்தினரின் பொறுப்பு. பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால் பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர்; ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கர்நாடகா மாநிலத்தில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்களை எக்காரணத்தை கொண்டும் அரசு சகித்து கொள்ளாது.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற அரசு அனைத்து விதமான கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.