பள்ளி சுற்றுச்சுவர் மீது அமர்ந்து வாலிபர்கள் சிலர் மாணவியரை கிண்டல் செய்வதுடன், தட்டிக் கேட்கும் ஆசிரியர்களையும் கேலி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழைய பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் படிக்கின்றனர். சமீபகாலமாக பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலர் வெளி ஆட்களுடன் பழகி, போதை பழக்கத்திற்கு அடிமையாவதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
மதியம் உணவு இடைவேளை மற்றும் பள்ளி முடியும் நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து மாணவியரை கிண்டல் செய்வதாகவும், ஆசிரியர்கள் தட்டி கேட்டால் "குவாட்டர், பிரியாணி வாங்கி தந்தால் நாங்கள் போய் விடுவோம்" என கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மாணவியர் சிலர் பள்ளி செல்லவே அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், "பெருங்களத்தூர் பள்ளி முன்பு போல் இல்லை. மாணவர்களின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டது. மாணவியரை கிண்டல் செய்வது அதிகரித்துள்ளது" என்றனர்.
பீர்க்கன்காரணை போலீசார் கூறுகையில், "வாலிபர்கள் பள்ளி சுற்றுச்சுவர் மீது அமர்ந்து மாணவியரை கிண்டல் செய்வதாக அலைபேசி மூலம் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.