சிவகங்கை, எஸ்.புதூர் அருகே தர்மபட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் இரு கோஷ்டியாக செயல்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது" என கலெக்டர் ராஜாராமனிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதை மறுத்த ஆசிரியர்கள், பள்ளி கட்டடப் பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தனர்.
எஸ். புதூர் தர்மபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தர்மபட்டி, அண்ணாவிபட்டி, அதிகாரம், கோனாம்பட்டில் இருந்து 92 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். நேற்று காலை "இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை" எனக்கூறி அப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்சவள்ளி, ஊராட்சி தலைவர் காந்திமதி தலைமையில் வந்த மாணவர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
மாணவர்களிடம் கலெக்டர் விசாரித்தார். அப்போது சில மாணவர்கள், "எங்களுக்கு நலத்திட்டங்கள் தாமதமாக கிடைத்தது. ஆசிரியர்களுக்குள் ஈகோ நிலவுகிறது; சரியாக பாடம் நடத்துவதில்லை. அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை" என தெரிவித்தனர்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிக்குமாரை அழைத்த கலெக்டர், புகாரை விசாரித்து பிரச்னைக்கு உரிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி நிதி 10.5 லட்ச ரூபாயில் மூன்று வகுப்பறைகள் கட்டினர். கட்டி ஆறு மாதங்களில் சேதமடைந்து விட்டது. கட்டுமான பணி செய்தவர்கள் இதற்கான பில்லையும் தரவில்லை. பள்ளிக்குழு கூட்ட தீர்மானத்தில் இதை கண்டித்தோம். இதனால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது பிரச்னைகளை கிளப்பி விடுகின்றனர். எங்களுக்குள் ஈகோ&' இல்லை" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.