Pages

Tuesday, July 1, 2014

அலுவலகத்துக்கு ஆடி, அசைந்து வந்த 40 அரசு ஊழியர்கள்.. வீட்டுக்கு திருப்பியனுப்பிய மத்திய அமைச்சர்

தாமதமாக அலுவலகம் வந்த தகவல் தொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களை விடுமுறை எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்டார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அலுவலகம் டெல்லி சாஸ்திரி பவனில் உள்ளது. இவரது அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கெல்லாம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வர வேண்டும் என்பது உத்தரவு.
அதேபோல அமைச்சர் காலை 9 மணிக்கெல்லாம் ஷார்ப்பாக அலுவலகம் வந்துள்ளார். ஆனால் நேராக தனது அறைக்கு செல்லாமல், அதிகாரிகள் அறைகளுக்கு விசிட் அடித்துள்ளார்.
கிளம்புங்கப்பா முதலில்.. இந்த ஊழியர்களை எச்சரித்த அமைச்சர், "இன்று நீங்கள் யாரும் வேலை செய்ய வேண்டாம். ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று கோபத்துடன் கூறி திருப்பியனுப்பி விட்டார். இதனால் தொங்கிய முகத்தோடு, அரசு ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.

2 comments:

  1. Welldone Minister!
    But..
    Will it continue?

    ReplyDelete
  2. primary & middldle schoolli check seithaal 90% leave pota venti irukkum.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.