Pages

Tuesday, July 22, 2014

ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள்.

அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழிஎந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில்,பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது. அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. தாள் 1
    க்கான
    காலிப்
    பணிய
    ிடம்
    சுமார்
    2300
    இருக்க
    வாய்ப்
    பு..
    theinbo
    rnteach
    ers.blog
    spot.in

    ReplyDelete
  2. hai friends we had a fruitful news. we should pray for ourselves to get posting .very all the best for ourselves.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.