அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார்.
வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது.
இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும்.
கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழிப் பிரிவே இல்லை. ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. 21 நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.
நிகழாண்டு ஆங்கிலவழிப் பிரிவில் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்த ஆசிரியர்கள் என்ற மெட்ரிக் பள்ளிகளின் தவறான அணுகுமுறையை தமிழக அரசும் கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது.பணக்கார பிள்ளைகள் ஆங்கிலம் படிக்கும் போது ஏழைகள் தமிழில் படிக்க வேண்டுமா?என்று நினைத்து தமிழை மட்டம் தட்டி புறம்பே தள்ளுவதை நிறுத்தி அரசு,மெட்ரிக் என எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாகவும்,ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும்
ReplyDeleteதமிழ் பயிற்று மொழி இல்லா தனியார் பள்ளிகட்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்
ReplyDeleteதமிழ் வழி மாணவர்கட்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும்
ReplyDeleteஇது தமிழ் நாடா?ஆங்கில நாடா?ஆங்கிலம் இல்லாவிட்டால் வாழவே முடியாதா?வெள்ளைக்காரன் அவன் மொழியை உலக மொழி ஆக்கி விட்டான்.நாமோ நம் தமிழ் மொழியை அழிக்க பாடுபடுகிறோம்.்
ReplyDeleteதமிழ்நாட்டிற்கு வெளியே வேறு எந்த மாநிலம்,நாடு சென்றாலும் தமிழ் உதவாது என்று நாமே ஏளனம் சொல்லும் இழிநிலைக்கு நாம் வெட்கப்பட வேண்டும்.
ReplyDeleteதமிழில் பேசுவதே அவமானமாக நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.
ReplyDeleteகுஜராத்தில் 3ஆம் வகுப்பு வரை ஆங்கிலமே கிடையாது.மற்ற வகுப்புகளுக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவே உள்ளது.
ReplyDeleteSABL விஷயத்திலும் சரி,ஆங்கில வழி வகுப்பு தொடங்குவதிலும் சரி அரசு, ஆசிரியர்களின் கருத்தை கேட்கவே இல்லை.8 வரை பாஸ்,CCE,Trisemester ,ஆசிரியருக்கான சுதந்திரமின்மை ,அரசின் வெற்று சாதனை விளம்பரம்,அனைத்தும் பாதிப்பது அரசுப்பள்ளி மாணவர்களைத் தான்.
ReplyDeleteவிலையில்லா பொருட்கள் வேண்டாம்.தரமான கல்வி தான் வேண்டும்.தமிழக அரசால் தர முடியுமா?
ReplyDeleteஇன்று ஆசிரியர்களிடம் அடி வாங்காத மாணவன் நாளை போலீஸ்காரனிடம் அடி வாங்குவான்
ReplyDelete்.ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோராம் நல்ல காமெடி.
Let study their mother tongue weather it's Tamil Urdu or Kannada as first language.
ReplyDeleteEnglish medium is also necessary like Tamil medium.
Let study their mother tongue weather it's Tamil Urdu or Kannada as first language.
ReplyDeleteEnglish medium is also necessary like Tamil medium.
Kovindo kovindo
ReplyDeleteEngundalavada venkatramana kovinda kovinda
ReplyDeleteதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண்உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.அந்த இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரிவோர் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் பணிபுரிவோர் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்றும் கட்டளையிட்டுருப்பதாகவும், எனவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்நடவடிக்கையை இந்தித் திணிப்பாகக் கருத வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த விளக்கம் இந்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மூடிமறைக்கும் தந்திர விளக்கமாகும்.இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய அலுவல் மொழி பற்றிய 1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம், இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் என்றும், தொடர்ந்து இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் சொல்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளஒன்றிய அலுவலகங்களில் இந்தி மட்டுமே கட்டாய அலுவல் மொழியாக இருக்கும் என்று அது கூறவில்லை. அச்சட்டத் திருத்தம் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தியிலும்இருக்கலாம், ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்றுதான் கூறுகிறது.இந்தியைத் தீவிரமாக திணிப்பதற்கான முனைப்பில் காங்கிரசு அரசும் செயல்பட்டது. இப்பொழுது பா.ச.க. அரசும் அதே திசையில் செயல்படுகிறது.1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்திற்கு மதிப்பளித்து 27.05.2014 அன்று வெளியிட்ட மேற்படி கட்டளைச் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.மேற்கண்ட இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து கண்டனக் குரல்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டில் எழுந்தது பாராட்டத்தக்கது. ஆனால், பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ்வழிப் பிரிவை புறந்தள்ளும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளை திணித்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இந்திய அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது நகைமுரணாக உள்ளது.உண்மையில் தமிழ் மொழியின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், சட்டப்படி தமிழக அலுவல் மொழியாக உள்ள தமிழை குறைந்தது பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலாவது கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்.தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்கருணாநிதி அவர்கள் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளைப் பள்ளிக் கல்வியில் திணிப்பதைக் கண்டித்து, அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுட்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை; அமைதி காக்கிறார். இவரைப் போல், இப்பொழுது இந்தித் திணிப்பை எதிர்க்கும் இன்னும் சில தலைவர்களும் தமிழக பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிப் பிரிவுகள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடவில்லை. இவர்களுடைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, எந்த வகையில் மொழிக் கொள்கையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தும் நிலையில் உள்ளது என்பது வினாக்குறியாக உள்ளது.எனவே, தமிழ் உணர்வாளர்கள் – தமிழ் மக்கள் வெற்று ஆரவாரமாகவும் தமிழ் மக்களைக் கவரும் ஓர் உத்தியாகவும் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் அரசியல் தலைவர்களின் போலித்தனத்தையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து சரியான மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.தமிழ்நாட்டில் தொடக்கிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் இந்தியஅரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை என்பதை தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
ReplyDelete