கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவி பெறும் துவக்க பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 71 மாணவ, மாணவிகள் பள்ளியில் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய 'தானே' புயலில் இப்பள்ளி கட்டடம் முற்றிலும் சேதமானது. இதுவரை புதியதாக கட்டடம் கட்டாததால், சமுதாயக் கூடத்தில் பள்ளி இயங்குகிறது.
ஒரே அறையில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். இதில், ஒரு ஆண்டுக்கு முன் ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை. 6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்குப் பதிலாகவும் வேறு ஒருவரும் நியமிக்கப்படவில்லை.
தற்போது ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். இவர் ஒருவரை ஐந்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் பாடம் நடத்த முடியவில்லை. இவர் விடுமுறை எடுத்தால் அன்று பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபற்றி அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். உடனடியாக கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கா விட்டால் பள்ளிக்குப் பூட்டு போடும் போராட்டம் நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.