Pages

Wednesday, June 18, 2014

தலைமை ஆசிரியை முன்பு பள்ளி மாணவர் தீக்குளிக்க முயற்சி

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை முன்பு மாணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தேனி அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அல்லிநகரம் சாலிமரத்தெருவை சேர்ந்த வீராச்சாமி என்பவருடைய
மகன் சாமுவேல்(வயது 19) கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்து முடித்தார். இவர் அதே பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து அரசு பொதுத் தேர்வில் 416 மதிப்பெண்கள் எடுத்ததால் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் பிளஸ்-2 படிப்பை வேறு பள்ளியில் படிப்பதற்காக தனது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் கடந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை அளிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டு வந்துள் ளார். ஆனால் மாற்றுச் சான்றி தழ் கொடுக்காமல் அலைக் கழித்ததாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி பள்ளி மாற்று சான்றிதழை சாமுவேல் பெற்றுள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
இதனைத் தொடர்ந்து சாமு வேல் தான் பிளஸ்-1 படித்தற்கு அரசு உதவித்தொகை தருமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் கல்வித்துறையிடம் இருந்து இதுவரை எந்த மாணவருக்கும் அரசு உதவித்தொகை வர வில்லை, ஒரு மாத காலத்தில் பெற்று தருவதாக கூறி உள் ளார். இதனை சாமுவேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நேற்று காலை இவர் தனது வீட்டில் இருந்து இருந்து மண்எண்னை கேனுடன் தான் படித்த பள்ளிக்கு வந்தார்.
பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள், சாமுவேல் மண்எண்ணை கேனுடன் வந்ததை வேடிக்கை பார்த் தனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை ஜேசுவின் பவி அங்கு வந்தார். உடனே மாணவர் சாமுவேல் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே ஆசிரியர்கள் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் அல்லிநகரம் போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற மாணவர் சாமுவேலை பிடித்து போலீஸ் நிலையத் திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.