Pages

Wednesday, June 18, 2014

கல்வி அலுவலர் எச்சரிக்கை தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை:

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்தாண்டு பள்ளி திறந்து 15 நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியர்கள், இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக ஆய்வு செய்த போது, 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து குறுந் தகவல்கள் பெறப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை தலைமை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.