Pages

Saturday, June 28, 2014

சத்துணவு சாம்பாரில் விழுந்த சிறுமி சாவு: பள்ளியில் 3 பேர் இடைநீக்கம்

ராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மூவரை மாவட்ட ஆட்சியர் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகள் பிரியதர்ஷினி (3). இவர் இங்குள்ள தனியார் மழலையர் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஜூன் 20ஆம் தேதி பள்ளியில் மதிய உணவு நேரத்தில் சத்துணவு சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பாரில் பிரியதர்ஷினி தவறி விழுந்தார். உடனடியாக சிறுமியை, மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் சத்துணவு சமைக்கும்போது கவனக் குறைவாக பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர் இந்திரா, சமையலர் திருக்கோடி, சமையல் உதவியாளர் சுந்தரலட்சுமி ஆகிய மூவரை தாற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.