Pages

Friday, May 23, 2014

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு எங்களின் "TNKALVI" சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றவர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2வில் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க அவர் ஆசை தெரிவித்துள்ளார். மாணவி பாஹிரா பானுவிற்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


இதில் 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த ஒரே மாணவரான மகேஷ் என்பவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார். 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் 2வது இடத்தை பிடித்துள்ளனர். 3-வது இடத்தை 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் பகிர்ந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.