இந்தியா போஸ்ட் என்று அழைக்கப்படும் இந்திய தபால் துறை இந்தியாவில் வங்கிகளை திறக்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கான உரிமத்தை நிதியமைச்சகம் மறுத்தும், தற்போது ரிசர்வ் வங்கி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா தபால் துறை மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளது.
மேலும் மாதம் முழுவதும் தபால் அலுவலகத்தில் வேலையில்லாமல் பொழுதைபோக்கும் தபால் நிலைய ஊழியர்கள் இது கசப்பான செய்தியாக இருந்தாலும், மக்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான்.
இந்திய தபால் துறை இத்தகைய உரிமத்தின் மூலம் தபால் துறை, தபால் நிலையங்களின் மூலம் பிரமாற்ற வங்கிச் சேவை, டெப்பாசிட் போன்ற வங்கியின் முக்கிய சேவைகளை அளிக்க முடியும் எனவும் ராஜன் தெரிவித்தார்.
லிமிடெட் பாங்கிங் லைசன்ஸ் இத்தகைய லிமிடெட் பாங்கிங் லைசன்ஸ் பெறுவதினால் இந்திய தபால் துறை அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கிச் சேவையை அளிக்க முடியாது. குறிப்பிட்ட சில தபால் நிலைங்களில் மட்டுமே இத்தகைய சேவையை அளிக்க முடியும்.
ஸ்டேட் வங்கி தபால் துறை முழுமையான வங்கி உரிமம் கிடைத்தால் ஒரே வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியை விட பெரிய நிறுவனமான உருவெடுக்கும் என ரகுராம் ராஜன் தெரிவித்தார். ஸ்டேட் வங்கிக்கு இந்தியா முழுவதும் 1500 வங்கி கிளைகள் மட்டும் உள்ளது, தபால் துறைக்கு இந்தியா முழுவதும் 1.5 இலட்சம் கிளைகள் உள்ளது குறிப்பிடதக்கது.
please publish G.O regarding second incentive increment for acquiring M.Com as S.G teacher
ReplyDelete