செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதைய குஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது. யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?
பள்ளி படிப்பை வட்நகரில் தொடங்கிய நரேந்திர தாமோதர்தாசு மோடி. பள்ளியின் சராசரி மாணவன் தான் ஆனாலும் அவரை பேச்சு போட்டிகளில் வெல்ல ஆளே இல்லை என்பது அவரது ஆசிரியரின் கருத்து. இன்று வரை அவரது பேச்சுகள் தான அவருக்கு பலமாக இருந்து வந்திருகின்றன.இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் கொண்ட மோடியின் ஆர்வத்திற்கு வாய்ப்பளித்தது ஆர்.எஸ்.எஸ். அதில் இணைந்து பிரச்சார கூட்டங்களில் குஜராத், இமாச்சலில் தன் சேவையை தொடர்ந்தார்.இடையில் அவரது 18வது வயதில் குழந்தை திருமணம் அதனை விடுத்து இயக்கத்தில் கவனம் என தன் பாதையில் தெளிவாக பயணித்த மோடி 1998ம் ஆண்டு முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா வெற்றிகளுக்கு பிறகு 2001ம் ஆண்டு அக்டோபரில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் ஆனார்.
குஜராத் அரசியலில் 2063 நாட்களுக்கு மேல் தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் மோடி தான் வைத்துள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அமெரிக்க விசா மறுப்பு என சர்ச்சைகளில் சிக்கினாலும் பொருளாதரா, தொழில்நுட்ப துறைகளில் குஜராத்தை உயர்த்தி இந்தியாவை குஜராத்தோடு ஒப்பிட வைத்தவரும் மோடி தான்.
இவர் மற்ற அரசியல்வாதிகளை போல் இல்லை! ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாயவேலை காட்டி வருகிறார். இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர், திருமணத்தை மறைத்தவர் என தேர்தலில் பல புகார்கள் முன் வைக்கப்பட்டலும், இவர் தான் பிரதமர் வேட்பாளர் என்றதும் பங்குச்சந்தைகள் பரபரப்பாக தொடங்கின. முடிவுகள் நெருங்கும் போது சென்செக்ஸையும், நிஃப்டியையும் தன் கட்டுபாட்டில் ஆட வைத்தார் இவர்! இன்று வெளியாகி கொண்டிருக்கும் முடிவுகளில் கிட்டத்தட்ட இந்த மனிதர் தான் பிரதமர் ஆவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் இந்தியா வென்றது! நல்ல நாட்கள் முன்னோக்கி உள்ளது என ட்விட்டி இருக்கும் நரேந்திர தாமோதர்தாசு மோடியை இனி இந்தியா பிரதமர் மோடி என்றழைக்க தயாராகி வருகிறது.
1947 ku piraku meendum india .viduthalai petrullathu MOODI G moolam.jaihinth
ReplyDeleteI LOVE INDIA. I LOVE MODI.
ReplyDeleteமோடி ஓர் மாமனிதர்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இப்படி ஒரு அரசியல்வாதியை புகழ் பாட கேள்வியே பட்டதில்லை. நமது நியாயமான எதிர்பார்புகளை நிறைவேற்றினால் இவர்தான் அனைவரின் உண்மையான தலைவரா ஆக இருப்பார்.
ReplyDeleteI love modiG.
ReplyDelete