Pages

Saturday, May 17, 2014

ஆலங்குடியில் தலைமை ஆசிரியை மாயம்

ஆலங்குடியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியயை காணவில்லையென வியாழக்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. ஆலங்குடி காந்திசாலையைச் சேர்ந்தவர் மலர்செல்வம். இவரது மனைவி விவாகேஸ்வரி(45). கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மே 1-ம் தேதி கறம்பக்குடியில் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்குச் செல்வதாக கூறிச்சென்ற விவாகேஸ்வரி வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து மலர்செல்வம் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் கீதா வழக்குப்பதிந்து மாயமான விவாகேஸ்வரியை தேடிவருகின்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.