அறிவியல், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் பொறுத்தளவில், கலந்துரையாடல் கலந்த பாடவேளைகளோடு ஒப்பிடுகையில், வெறுமனே சலிப்பூட்டும் வகுப்பறை உரைகள், மாணவர்களின் தோல்வி விகிதத்தை அதிகரிக்கின்றன என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் கூறப்படுவதாவது: இன்டராக்டிவ் செஷன் என்று அழைக்கப்படும்
ஆக்டிவ் லேர்னிங் செயல்பாடு, ஒரு மாணவரின் சிறப்பாக தேர்வெழுதும் திறனை அதிகரிக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில், கலந்துரையாடலைக் கொண்ட பாட வேளைகளின் மூலமே மாணவர்களின் தேர்வெழுதும் திறன் அதிகரிக்கிறது. வகுப்பறை உரைகள்(குறைந்தபட்ச அளவிற்குகூட ஆக்டிவ் லேர்னிங் இல்லாத) தொடர்பான பாட வேளைகளால், 55% மாணவர்கள் தோல்வியடைகிறார்கள். உதாரணமாக, ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் இருந்தால், வெறும் வகுப்பறை உரைகள் தொடர்பான கல்வியை பெறுபவர்கள் 34 பேர் தோல்வியடைகிறார்கள். அதேசமயத்தில் அவர்களுக்கு ஆக்டிவ் லேர்னிங் வாய்ப்பு அளிக்கப்பட்டால், 24 பேர் மட்டுமே தோல்வியடைகிறார்கள். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்யாலமா? சொல்லவே இல்ல
ReplyDeletekuttichsuvarakkum muraigal.eppadiye onraiyume muzhuthaga seyal paduththeergal,goodbye to kalvi.
ReplyDelete