Pages

Saturday, May 17, 2014

ஆர்.டி.இ. விண்ணப்பம் வழங்கும் காலஅவகாசம் நீட்டிப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் தனியார் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள், நுழைவு வகுப்பில் 25 சதவீத இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இதன்படி நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 3ம் தேதியில் இருந்து நாளை 18ம் தேதி வரை வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. serkkai mudinthuvitta nilai.eyakkunar een janu2014 muthal vilambaram seyyavillai . etho nadakkuthu.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.