பள்ளி, கல்லூரி வாகனங்களை பொது ஆய்வு செய்ய வேண்டுமென ஆர்.டீ.ஓ.,க்கள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதி உள்ளதா என பொது ஆய்வு செய்ய வேண்டுமென அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சென்னை போக்குவரத்து கமிஷனர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகளை 31ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். அதன்படி, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை பொது ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய ஊர்களில் வாகனங்களை ஆய்வு செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை வாராந்திர தர ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வாகனங்களை சேலம் பறக்கும்படை ஆர்.டி.ஓ. பிரபாகரன், தர்மபுரி ஆர்.டி.ஓ. அசோக்குமார் வாகன ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதிமுறைகளின் படியும், போக்குவரத்து விதிமுறைகளின் படியும் வாகனங்களில் தர சான்றிதழ்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. அசோக்குமார் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1095 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளன. இதில் தர்மபுரியில் மட்டும் 285 வாகனங்களும், பாலக்கோட்டில் 125 வாகனங்களும், அரூரில் 362 வாகனங்கள் என மொத்தம் 772 பள்ளி வாகனங்கள் உள்ளன. தர்மபுரியில் 221 வாகனங்களும், பாலக்கோட்டில் நான்கு வாகனங்களும், அரூரில் 98 வாகனங்களும் என மொத்தம் 323 கல்லூரி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஓரிரு நாட்களில் பொது ஆய்வு நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.