Pages

Tuesday, April 22, 2014

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு

பணி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: வேலூரில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஜூலை மாதம் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு உச்சநீதி மன்றம் சாதகமான தீர்ப்பை அளித்தது.
அதன்படி 9 ஆண்டுகள் தாற்காலிகமாக ரூ.1000 ஊதியத்திலும், நான்கரை ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான முறையான ஊதியத்திலும், பணியாற்றி 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ள காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரத்து செய்யப்பட்ட பதிவை புதுப்பித்து மீண்டும் எங்களை மட்டும் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்து எங்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கோரிக்கை வைப்பது எனவும், வரும் மக்களவைத் தேர்தலில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதோடு, நண்பர்களிடம் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

14 comments:

  1. what you decided regarding aiadmk aadharavu that is okay.

    But there is the lot of confusion from the above message you should know every body can understand easily
    what you have stated above (regarding 652 posts again needs to be appointed?).

    Avoid this kind of Confusion message.
    Think you are graduate.......

    ReplyDelete
  2. This is 100% wrong information. The court only ordered to dismiss these 652 failed candidates. Now how will they give judgement to post these twice failed candidates through Seniority. TNKALVI kindly check the authenticity of the information before publishing. Actually the honorable Supreme court ordered to fill the 652 posts through Employment Seniority of B.Ed., Computer Science graduates. AVOID this kind of WRONG information on your GOOD service.

    ReplyDelete
  3. டே , நாயே நீ 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் நிலைமையை நினைத்து பாருடா நாயே. நீ மட்டும் case போடவில்லையெனில் . இந்த நேரம் அரசு பள்ளிகளில் 15000 கணினி ஆசிரியர்கள் இருப்பார்கள்டா. நீ 652 கணினி ஆசிரியர்களை குடும்பங்களை நடுத்தெருவுக்கு வரவைத்ததும் இல்லாமல் இளம் பட்டதாரி கணினி அறிவியல் படித்தவர்களையும் வரவிடாமல் தடுத்துத் கொண்டிருக்கிறாய். இளம் பட்டதாரிளே கொஞ்சம் யோசித்து பாருங்கள் , பள்ளிகளில் வேலை பார்ப்பவர்கள் சங்கம் வைக்கலாம், சும்மா இருக்கும் நாய்க்கு எதுக்கு சங்கம். யோசித்து பாருங்கள். காரணம் என்னவென்றால் பணம், சங்கத்தில் சேருவதற்கு 1000 ரூபாய் பணம் , இப்படியே கிட்டதட்ட 10000 ஆயரம் பட்டதாரிகளிடம் பணம் பெற்று விட்டார்கள், பட்டதாரிகளே ஏமாறதீர்கள்.

    ReplyDelete
  4. டே , நாயே நீ 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் நிலைமையை நினைத்து பாருடா நாயே. நீ மட்டும் case போடவில்லையெனில் . இந்த நேரம் அரசு பள்ளிகளில் 15000 கணினி ஆசிரியர்கள் இருப்பார்கள்டா. நீ 652 கணினி ஆசிரியர்களை குடும்பங்களை நடுத்தெருவுக்கு வரவைத்ததும் இல்லாமல் இளம் பட்டதாரி கணினி அறிவியல் படித்தவர்களையும் வரவிடாமல் தடுத்துத் கொண்டிருக்கிறாய். இளம் பட்டதாரிளே கொஞ்சம் யோசித்து பாருங்கள் , பள்ளிகளில் வேலை பார்ப்பவர்கள் சங்கம் வைக்கலாம், சும்மா இருக்கும் நாய்க்கு எதுக்கு சங்கம்.(COMPUTER TEACHER ASSOCIATION), யோசித்து பாருங்கள். காரணம் என்னவென்றால் பணம், சங்கத்தில் சேருவதற்கு 1000 ரூபாய் பணம் , இப்படியே கிட்டதட்ட 10000 ஆயரம் பட்டதாரிகளிடம் பணம் பெற்று விட்டார்கள், பட்டதாரிகளே ஏமாறதீர்கள். நீ 5 வருடம் வேலை பார்த்து விட்டு உன்னை வேலையை விட்டு தூக்கினால் எப்படி இருக்கம். உன்னை யாருனே எங்களுக்கு தெரியாது , எங்களை ஏன்டா சீண்டுர நாயே, நாங்க தகுதி இல்லாதவர்களா, நீ தகுதியுள்ளவனா, அப்படியென்றால் தேர்வு வைங்க என்று கோர்ட்'ல CASE போடு , அதைவிட்டுபுட்டு ஏன் seniority தான் வேனும் என்று போடுகிறாய், அப்ப யார் தகுதி இல்லை என்று எண்ணி பாருடா நாயே.

    ReplyDelete
  5. 14 வருடங்ளாக அரசு பள்ளிகளிகளில் பணியாற்றி , எங்களுடைய உழைப்பு மற்றும் வியர்வையை அரசு பள்ளி மாணவர்களுக்காக அர்பணித்துள்ளோம். எங்களிடம் படித்த மாணவர்கள் பெரிய Engineer மற்றும் Software Engineer-ஆக உள்ளார்கள். நாங்கள் தகுதியில்லை என்று நீ சொல்லுகிறாய். ஓட்ட பந்தயத்தில் பங்கேற்கவே இல்லை நீ, நாங்கள் ஓடுவதை பார்த்து பொறாமை பட்டு , ஓட கூட திராணி இல்லாத நீ எனக்குதான் கோப்பை வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம். நாங்கள் போரா்டி வாங்கிய வேலையை பறிக்க பார்க்கிறாயா. ஒன்றே ஒன்று புரிந்து கொள் , திருடன் நல்லா இருந்ததாக சரித்திரம் இல்லை. நீதான் திருடன் எங்கள் வேலையை பறித்து நீ நல்லா இருக்கலாம் என்று நினைக்கிறாய். நாங்கள் இந்த ஒரு வருடமாக எவ்வளவு மனவேதனை , மன எரிச்சல் அடைந்தோம் என்று உனக்கு தெரியாது அதற்கு நீ பதில் சொல்லியே தீர வேண்டும்.இதையெல்லாம் நினைத்து பார்த்து எங்களுக்கு நல்லதுதான் செய்வார்கள் இந்த அரசு. அரசு பள்ளி ஏழை மாணவர்கள் மேம்பாட்டிற்காக, 14 வருடம் உழைத்த நாங்கள் இப்போது வெளியே உள்ளோம். இப்போதே விவாதம் நடத்த தயாரா , இப்போதே பதில் சொல்.

    ReplyDelete
  6. நாகரீகமாக கருத்து தெரிவிக்க கூட தெரியாத உன்னை எல்லாம் வேலையில் இருந்து தூக்கியது தவறே இல்லை. நீங்கள் ஒன்றும் நேர்மையாக அந்த வேலைக்கு செல்ல வில்லையே. கொஞ்சம் யோசித்து பார். அன்று தி.மு.க.வுக்கு ஆதரவு இன்று அ.தி.மு.க. வுக்கு ஆதரவா? நீங்கள் எத்தனை வில்லங்கங்கள் எத்தனை ஏமாற்று வேலைகள் செய்தீர்கள்? உன் மனசாட்சியை கேள். இன்று நீ குமுருகிராயே நாங்கள் எத்தனை ஆண்டுகள்? எத்தனை வழக்குகள்? எவ்வளவு குமுறல்கள் அத்தனையும் சட்ட பூர்வமாகவே சந்தித்தோம். உனக்கு உண்மையில் உங்கள் மேல் நியாயம் இருந்தால் சட்ட பூர்வமாக சந்திப்போம். வா நீதிமன்றத்துக்கு... "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் இறுதியில் வெல்லும்"

    ReplyDelete
    Replies
    1. Post court il ketkakoodadhu govt munbu nindral indha neram 15000 cs teacher velaiku poyirukalam

      Delete
    2. Neengal kattiya court case ungal pinnal varum fresh b.ed padithavargal ungalai seneiority il poda viduvargala .
      Rti padi exam eludha vaikka court ikku ready aaggi vittargal .govt ondrum theriyamal 1000 paniyidam seniority endru sollavillai. Govt ikku case varum endru ungalai pattri theriyatha enna . 10 varudam neengalum matravargal vaalkkayai veenadithu viteergal

      Delete
  7. தினமலர் - 24 ஏப்ரல் - 2014

    அரசு பள்ளிகளில் விரைவில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம்?

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில், 1,000த்திற்கும் அதிகமான, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களை முறையாக நியமனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு தேர்வை தமிழக அரசு நடத்தியது. இதில், 652 பேர் தோல்வி அடைந்தனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 652 பேரையும், பணி நீக்கம் செய்ய, கடந்த ஆண்டு,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'பி.எட்., கல்வித்தகுதி பெற்ற கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. துறை வட்டாரம் கூறுகையில், 'உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், புதிதாக கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டியது குறித்தும், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அரசின் உத்தரவு வந்ததும்,

    வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என, தெரிவித்தது. எனவே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை, பதிவு மூப்பு அடிப்படையில், ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு ஆவன செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  8. எல்லோரும் கோர்ட்க்கு போகட்டும் பிரதர். நீதி கிடைக்கட்டும். உங்களுக்கு இருக்கற பவர் பயன்படுத்தி 15,000 பேருக்கு போஸ்டிங் வாங்குங்க பிரதர். அப்போ அவங்க 652 பேர கண்டுக்க மாட்டாங்க... எல்லோருக்கும் exam வைக்க சொன்ன போது B Ed படிச்சவங்களுக்கு seniority தான். பெயில் ஆனவங்களுக்கு மட்டும் தான் எக்ஸாம் என்று அன்று முடிவு பன்ணிட்டு நீங்க முட்டுமே ஓட்டப்பந்தயத்துல ஓடியும் தோத்துட்டு இன்று அவங்கள ஓட்டபந்தயத்துக்கு கூப்பிட்டா என்ன பிரதர் நியாயம்?....

    அம்மாகிட்ட கோரிக்கை வைங்க பாஸ் கருணை அடிப்படையில் வேற எதாவது போஸ்டிங் போட்டு விடுவாங்க...

    ஆனா கடந்த முறை தி.மு.க. வ ஆதரிச்சீங்கன்னோ, அ.தி.மு.க வுக்கு எதிரா தேர்தல் பிரச்சாரம் செய்தீர்கள் என்றோ தெரியாம பாத்துக்குங்க பிரதர். All the Best !

    ReplyDelete
  9. Failed candidates vudan nangalum exam eluthuvom endru neengal ketkavillai endru judgement il vullathu
    Indru varai oru nabarum exam eluthukirome endru oruvarum en munnal illai endru judge sonnathai padikavillaya
    nanga thagudhi illai endral engalidam paditha unga b.ed kandippaga thaguthiyillai than

    ReplyDelete
  10. Nangalavuthu 2go vt iyum atharavu therivithu ketkirome
    arasu velai parpavargal nadunilamaiyaga seayalpada vendum endru ungaluku theriyathey
    neengal 2govt iyum pagai aakki kondulleergale
    pavam pinnal varum b.ed cs padithavargal

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.