Pages

Tuesday, April 15, 2014

ஆசிரியர் கூட்டமைப்பு திடீர் உண்ணாவிரதம்

தொலைதூர இடங்களில், தேர்தல் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது' வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் எதிரே, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் என, வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

இதில், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். இதில், 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இப்போராட்டத்தில், வேதை வட்டத்திலுள்ள ஆசிரியர்களை மயிலாடுதுறை, கொள்ளிடம் உள்ளிட்ட அதிக தொலைவுள்ள இடங்களில் தேர்தல் பணியமர்த்தக்கூடாது; மயிலாடுதுறை தேர்தல் பயிற்சி வகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தல் பணி நியமன ஆணையை தேர்தல் அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் எனவும், கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.