"வேலை தேடுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வேலை வாய்ப்பை உருவாக்கும் நிலைக்கு மாணவர்கள் உயர வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் 75வது ஆண்டு, "பிளாட்டினம் ஜூபிளி" விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மார்ஷல் ஜோசப் வரவேற்றார். ஊட்டி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன் பேசுகையில், "ஒரு மனிதனின் சமுதாய ரீதியான வளர்ச்சிக்கு மொழி இடையூறாக இருக்க கூடாது. தமிழ் வழி கல்வி பயின்ற பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். கல்வி என்பது, தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சமுதாய வளர்ச்சிக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.
வேலை தேடுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வேலை வாய்ப்பை உருவாக்கும் நிலைக்கு மாணவர்கள் உயர வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகள், மனித குலத்திற்கு நன்மை தருவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.