2014ம் ஆண்டு ஜுன் மாத நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இறுதி நாள் மே 5. ஜுன் மாதம் 29ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. JRF ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான நெட் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் 2 முறை தேசியளவில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நாடு முழுவதுமுள்ள பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள். மொத்தம் 79 பாடங்களில், நாடெங்கிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட 86 கல்வி மையங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வை எழுத, முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் 50% பெற்றாலே போதுமானது.
தேர்வு கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு - ரூ.450
OBC பிரிவினருக்கு - ரூ.225
SC/ST/PWD பிரிவினருக்கு - ரூ.110
விரிவான விபரங்களுக்கு http://www.ugcnetonline.in/
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.