Pages

Tuesday, April 22, 2014

இடமாறுதல் அறிவிப்பு வெளியிடாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இட மாறுதல் அறிவிப்பு வெளி யிடாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில், ஆண்டு தோறும் கல்வியாண்டின் இறுதி மாதமான ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறு தல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பெறப்படுவது வழக்கம்.
மே இறுதி வாரத்தில் இதற்கான கலந்தாய்வு அந் தந்த மாவட்டத் தலைநகரங் களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் தனித் தனியாக நடத்தப் பட்டு, மாறுதல் ஆணைகள் வழங்கப்படும். இடமாறுதல் பணி மூப்பு அடிப்படையில் நடத்தப் பட்டு, ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நாளிலேயே புதிய பள்ளிகளுக்கு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பொறுப் பேற்பர். இதனால், மாறுதல் பெறும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அந்தப் பகுதி யில் உள்ள பள்ளிகளில் சேர்க்க ஏதுவாக இருக்கும். ஆனால், ஏப்ரல் 20-ஆம் தேதி ஆனபோதும், தொடக் கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் இதுவரை கலந்தாய்வுக்கான அறிவிப் பை வெளியிடவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மே மாதத்திலேயே கலந் தாய்வு நடத்தினால், புதிய இடங்களுக்கு ஆசிரியர்கள் தங்களது குடும்பத்தினரை இடம்பெறச் செய் வது சுலபமாக இருக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கலந்தாய்வு நடத்துவதால், எங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது மிகவும் சிரமம். கல்வித் துறை ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்த வேண்டும். அதிகாரிகள் தேர்தலைக் காரணம் காட்டத் தேவை யில்லை. தற்போது கலந்தாய்வுக் கான  விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், வாக்கு எண்ணிக் கை  முடிந்த  பின்னர் கூட கலந்தாய்வை நடத்தலாம் என்றனர்.

3 comments:

  1. NANGAL SANGAM ARAMEKKUMPOTHU EVARGAL 1 VARUDAM KOODA THANGA MATTARGAL PANATHI VANGI KONDU ODIVIDUVARGAL ENDRUM .PALA VIMARSANANGAL VANTHATHU AANAL AVATRAI THAVUDU PODIYAKKI VARALLATRU VETTRI PETRATHU SSTA//// IYAKKAM ARAPITHATHU MUTHAL ETHUNALVARAI ANAITHU VAARAVU SELLAVUGALUKKUM (A/C) ULLATHU, ATHAI ANAITHU MAVATTA SEYALALARGALUKKUM KODUTTHU ULLOM .UNGALALUKKUM VENDUMENRAL VANGI KOLLUNGAL RAJA RANI SIR/MADEM /////.ETHU POL VEMARSANANGAL THAN INNUM VEEGAMAGA SEYALATTRA THUNDUKIRATHU ATHARKU NANDRI. OOTHIYA VAZHAKKIL ADUTHA VETTRIYAI NEELAI NATTUVOM!!!! VETRI SSTA VERKKA.....

    ReplyDelete
  2. SELVARAJ SAID
    SSTA sangam matum than namakaga supreme courtla poi transfer case muduchanka..,Ithula entha sangamum intha casea eduthu nadathala..,
    Raja Rani Sir Transfer enabathu ungaloda sontha virupam nenga porathum pogathaum unga istam..,

    ReplyDelete
  3. Muthukumar From Pdk:
    Raja Rani Sir,SSTA Sangam uruvanthunala than intha year counseling eligible.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.