ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் புதிய விதிமுறையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தில் பிரியம்வதனா உள்பட 18 பேர் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கணக்கிட்டு முறையை அரசு அறிமுகம் செய்து அரசாணையில் புதிய விதிமுறை வகுத்தது.
இந்த விதிமுறை சட்டவிரோதமானது. சமமில்லாதவர்களை, சமமாக்க இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. 90 முதல் 104 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் நிர்ணயித்து சமமாக கருதுவது தவறானது. எனவே அரசின் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, மனுதாரர் கூறிய படி, விதிமுறை சட்டவிரோதமானது. இதை ரத்து செய்கிறேன். எனவே மனுதாரர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு சதவீதம் நிர்ணயிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
இப்படி இவஙக ஒருபக்கம் கேஸ் நடத்தி கஷ்டப்பட,மறுபக்கம் ஒரு கூட்டம் டெட் எழுதாமலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி வாங்குறாங்க.அரசு அலுவலகப் பணியாளர்கள் டெட் எழுதாம இரண்டு வருடங்களாக பட்டதாரி அசிரியர் பதவிஉயர்வு வாங்கிடராங்க.அதனால இப்பொ அலுவலகப் பணியாளர் பதவி 6,7 லட்சம் தாண்டிப் போகிற்றிருக்கு.பி.எட்,எம்.எட் முடிச்சவங்கதான் அலுவலகப் பணியாளர் பதவி வாங்குறாங்க.ந்ம்ம அரசாங்கம் மாதிரி முட்டாள் எங்கயும் பாக்க முடியாது.
ReplyDeleteWeightege cancel seithu only tet mark and year seniaritikku kurippitta mark koduthu selection seithaal nantraha irrokkum
ReplyDelete