Pages

Monday, March 3, 2014

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. 2004க்குப் பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அரண்மனைவாசல் அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்துக்கு ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நீ.இளங்கோ தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இரா.இளங்கோவன், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சேதுச்செல்வம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், தொழில் கல்வி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆங்கில மொழி ஆசிரியர் கழக நிறுவனர் சேவியர் ஆரோக்கியதாஸ், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் அ.சங்கர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் அலெக்ஸாண்டர், வரலாற்று ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழனியப்பன், ஓவிய ஆசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பிரெடரிக் எங்கல்ஸ், tnkalviடி.சதீஸ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர். முத்துச்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.