திருப்பூர் அருகே, அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார் அருகே, சின்னகாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.காலை, பள்ளி துவங்கும் முன், தலைமையாசிரியர் குடிநீர் தொட்டி அருகில் சென்றுள்ளார்.அங்கு, துர்நாற்றம் வீசியுள்ளது.
சந்தேகமடைந்த அவர், குடிநீர் தொட்டியில் பார்த்தபோது, அதில், விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது.பள்ளி துவங்கும் முன், விஷம் கலந்தது தெரிய வந்ததால் குடிநீரை மாணவர்கள் யாரும் பருகவில்லை. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் கூடிய பெற்றோர்கள், போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால், சமூக விரோதிகள் விஷம் கலந்துள்ளனர் என, அதிகாரிகளிடம் வாதிட்டனர்.மேலும், பள்ளிக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திதர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.புகாரையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து, விஷம் கலந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஒரு திருத்தும்...
ReplyDeleteசின்னக்கம்பாளையம் அல்ல...
தயவு செய்து திருத்தும் செய்து கொள்ளவும்......
சின்னக்காம்பட்டி என்பதே சரி....
palli hm ku valthugal pala.than seyalgalai sariyaga seithathale periya asampavidam thadukaptulathu.
ReplyDelete