ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதேவேளை இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் என்று கூறியுள்ளது.
இந்த தீர்மானம் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதிக்கப்பட்டபோது அங்கு சமூகமளித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் இது குறித்து பேசுகையில், ஐநா ஆணையர் இலங்கை நிலவரம் குறித்து விசாரிப்பார் என்று கூறும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தமது கட்சி வரவேற்பதுடன், அப்படியான ஒரு விசாரணை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் இலங்கையில் நடத்தப்படுமிடத்து, அதற்கு தமது அமைப்பு பூரண ஆதரவை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா தந்த ஏமாற்றம்
இருந்தபோதிலும், இந்த தீர்மானத்துக்கான வாக்களிப்பில் இருந்து இந்தியா விலகி இருந்தமை, அதற்காக அதன் தூதுவர் கூறிய காரணங்கள், மற்றும் போதுமான நிதி இல்லை என்பதை காரணம் காட்டி அந்த தீர்மானத்தை பின்போடவும், சர்வதேச விசாரணையை தடுக்கவும் பாகிஸ்தான் கொண்டுவந்த எதிர்ப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை ஆகியவை குறித்து இலங்கை தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.