"பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்காக, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த, ரூ.2 ஆயிரம் கோடி எங்கே போனதென,'' சிவகங்கையில் நடந்த உண்ணாவிரதத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசினார். சிவகங்கையில், ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இளங்கோவன், உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நகராட்சி தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர்.
* தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசுகையில், பங்களிப்பு பென்ஷனுக்காக, ரூ.2 ஆயிரம் கோடியை ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்துள்ளனர். இதற்கு தகவல் உரிமை சட்டத்தில் முறையான பதில் இல்லை. மாநில அரசு, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை, மத்திய அரசுக்கு முறையாக செலுத்தவில்லை. புதிய பென்ஷன் திட்டத்திற்கு பின், 200 ஆசிரியர்கள் இறந்தும்; 40 பேர் ஓய்வும் பெற்றுவிட்டனர். ஆனால், பண பலன் கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்றது. ஆனால், லோக்சபா தேர்தல் அறிக்கையில் கூட, இந்த அறிவிப்பு வெளியிடவில்லை. ஆசிரியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்குப்படுவதை தடுக்க, பாதுகாப்பு விதிமுறை கொண்டுவரவேண்டும். 2004 -06ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்யவேண்டும், என்றார்.
1 comment:
In Swiss bank
Post a Comment