விபத்தில் சிக்கிய மாணவி, ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு, ஆசிரியை உதவியுடன், பிளஸ் 2 தேர்வு எழுதினார். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள் ராஜகுமாரி, 17. நேற்று காலை, பிளஸ் 2 தேர்வு எழுத, ஆட்டோவில் சென்ற போது, குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க முயன்றதில், ஆட்டோ கவிழ்ந்தது.
இதில், ராஜகுமாரியின் கை முறிந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சந்தித்து ஆறுதல் கூறினார். பின், மாணவியை ஆம்புலன்சில் பூதப்பாண்டி பள்ளிக்கு அழைத்து வந்து, தனி அறையில், ஆசிரியை உதவியுடன், தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.