Pages

Wednesday, March 19, 2014

சி.டி.இ.டி., தேர்வு முடிவுகள் மார்ச் 21ம் தேதி வெளியீடு

சி.பி.எஸ்.இ., சமீபத்தில் நடத்திய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்(CTET) முடிவுகள் வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெற்ற இத்தேர்வை மொத்தம் 8.26 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வெழுதியவர்களின் OMR sheet -களின் இமேஜ்கள், மொழிகள் மற்றும் பாடங்கள் குறித்த தகவல்களுடன் வாரியத்தால் பதிவேற்றம்(upload) செய்யப்பட்டுள்ளன. CBSE/CTET வலைதளத்தில், வாரியத்தால், Answer key பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கென்று, தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. முந்தைய தேர்வுகளின் முடிவுகள்படி பார்த்தால், தேர்வெழுதியோரில் சுமார் 10% அளவிற்கும் குறைவானவர்களே தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது பல்வேறான விமர்சனங்களை கிளப்பி விட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.