63 பள்ளிகளில், 192 தலைமை ஆசிரியர்கள் உள்ளனர். அளவிற்கு அதிகமாக தலைமை ஆசிரியர்கள் இருப்பதற்கு மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் இபோபி சிங் தலைமையிலான அரசு உள்ளது. இங்குள்ள தமெங்கால் மாவட்டத்தில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1.40 லட்சம் பேர் உள்ளனர். இங்கு 163 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 163 தலைமை ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் 192 தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் முறையற்ற கல்வி நிர்வாகத்தால் ஒரு பள்ளிக்கு, இரண்டு, மூன்று தலைமை ஆசிரியர்கள் கூட உள்ளனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்து வருகிறது. இதற்கு, மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்னையை மாநில கல்வித்துறையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.