Pages

Wednesday, February 5, 2014

பதவி உயர்வு நிறுத்தம்: கல்வி அலுவலர்கள் அதிருப்தி

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால், கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இத்துறையில், நூலகத் துறை இயக்குனர், 3 இணை இயக்குனர், 22 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவுள்ளன. இதற்கான பணிமூப்பு 'பேனல்' வெளியிடப்பட்டும், பதவி உயர்வு அறிவிக்கப்படவில்லை. பேனலில் உள்ள கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தொடரும் ரகசிய அறிவிப்பு:

பொதுவாக பணியிடங்களுக்கு ஏற்ப, பணி மூப்பு பேனலில் உள்ளவர்களுக்கு, மொத்தமாக பதவி உயர்வு அறிவித்து, அந்த பட்டியல் வெளிப்படையாக அறிவிக்கப்படும். கடந்தாண்டு முதல், பணி மூப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு, தனித்தனியாக அவர்கள் வீட்டுக்கு 'உத்தரவுகள்' அனுப்பப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்காக 24 பேர் பட்டியலில் இருந்தும், ஓரிரு நாட்களுக்கு முன் 2 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு அவர்கள் வீட்டிற்கு சென்ற பின், பதவி உயர்வு விஷயம் தெரிந்தது. இந்த நடைமுறை மாற வேண்டும். பதவி உயர்வு அறிவிப்பில் வெளிப்படை தன்மை வேண்டும் என, கல்வி அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.