சிறந்த இன்ஜினியர்களை அளிப்பதில் வடஇந்திய மாநிலங்கள் குறிப்பாக டில்லி மற்றும் பீகார் முன்னிலை வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு்ள்ளது.
ஆஸ்பிரிங் மைண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களி்ல் உள்ள 520 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
டில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் மேற்கு இந்திய பகுதியை சேர்ந்த கல்லூரிகள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரிகளை கொண்ட மாநிலங்களாக திகழும் தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்கள் குறைந்த வேலைவாய்ப்பை மட்டுமே வழங்கி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளான்களை போன்று நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதிகளவு இன்ஜினியர்கள் உருவாகும் நேரத்தில் குறைந்த அளவே வேலை திறன் மி்க்க இன்ஜினியர்கள் உருவாகின்றனர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.