சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆணையாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 138, 13 உட்பிரிவு(2)ன் படியும் நகரமன்ற தீர்மானத்தின்படியும் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 25 சதவீத தொழில்வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரையாண்டிற்கான மொத்த வருமானம் ரூ21,001 வரை உள்ளவர்களுக்கு தொழில்வரி விதிப்பு இல்லை.
ரூ21,001 முதல் ரூ30,000 வரை உள்ளவர்களுக்கு ரூ125ம், ரூ30,001 முதல் ரூ45,000 வரை உள்ளவர்களுக்கு ரூ313ம், ரூ45,001 முதல் ரூ 60,000 வரை உள்ளவர்களுக்கு ரூ625ம், ரூ60,001 முதல் ரூ75,000 வரை உள்ளவர்களுக்கு ரூ938ம், ரூ75,001 முதல் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ1250 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பின்படி நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் தொழில்வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.