மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் பேரணி நடத்துகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) நாமக்கல் மாவட்டக் கிளைக் கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தலைமையில் நாமக்கல் எஸ்பிஎம் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டச் செயலர் முருகசெல்வராசன் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவும், பதவியுயர்வுக்கு 6 சத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஆசிரியர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டச் செயலர் பழனியப்பன், தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் பூபதி, தமிழ்நாடு ஆசிரியர்கள் மன்ற நிர்வாகி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.