Pages

Saturday, February 1, 2014

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய அரசு அலுவலர்கள் முடிவு

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 25 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை அணிந்து கொண்டு பணிபுரிவது என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.


தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பு தினம் மாவட்டம் சார்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் பூங்குழலி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.

இதில் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் சங்கம், மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கம், பொதுப்பணித்துறை அரசு அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். தமிழக அரசில் பணிபுரியம் அலுவலர்களுக்கென்று பிரத்யேகமாக மாநில ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். 

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இக்கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பிப்ரவரி 3 முதல் 14-ஆம் தேதி வரை அனைத்து அரசு அலுவலர்களும் 25 அம்ச கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.