Pages

Thursday, January 23, 2014

கல்வியில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி என்றாலே பிள்ளைகளை படிக்க அனுப்ப மறுக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு கிராமமே ஆர்வம் காட்டி வருகிறது.

சுத்தமான சூழல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்களிடம் அமர்ந்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி தேனி மாவட்டம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் உள்ளது.

கடந்த 1912 ஆம் ஆண்டு திண்ணைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி தற்போது துவக்கப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. மாணவர்களுக்கு கணினி பயிற்சி , செயல்வழி கல்வி கற்பித்தல் என பல வழிகளில் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருவதாக இந்த பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி திறனும் உயர்ந்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியைப் போல அனைத்து அரசுப் பள்ளிகளும் செயல்பட்டால், நிச்சயம் ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.