சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் "கற்பித்தலில் உளவியல் அடிப்படையிலான அணுகுமுறைகள்" என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் நந்தநிலா தலைமை வகித்தார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் கண்மணி துவக்கினார்.
கருத்தரங்கில் "ஆசிரியரின் மனப்பான்மை" என்ற தலைப்பில் மதுரை செல்லமுத்து மனநல மற்றும் மறுவாழ்வு மையத்தின் உளவியல் துறை பேராசிரியை சுந்தரவள்ளி பேசுகையில், "மாணவர்களுக்கு விருப்பமான ஆசிரியராக இருக்க வேண்டும். மாணவரின் கற்பனை திறனை வளர்ப்பது, அவர்களின் திறனை பரிசோதிப்பது ஆசிரியரின் கடமையாகும். ஆசிரியர்கள் கோபப்படாமல் வார்த்தைகளை கவனமாக பிரயோகித்து, நன்மை, தீமைகளை ஆராய்ந்து சரியான முடிவு எடுக்க வேண்டும்"&' என்றார்.
"மன நுண்ணறிவு" என்ற தலைப்பில் மனநல உளவியலாளர் விக்னேஷ்வரன் பேசுகையில், "மனவெழுச்சியை திறன்பட கையாண்டால் ஆசிரியர் பணியை மன நிறைவுடன் செய்யலாம். மனவெழுச்சியை கட்டுக்குள் வைத்திருக்கும் மனிதன் திறமையானவராகவும், உடல் வலிமை உடையவராகவும் திகழ்வார்" என்றார்.
நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஜெயக்குமார் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மாநில அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.