Pages

Friday, January 17, 2014

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: வைரமுத்து

"திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்" என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வைரமுத்து பேசியதாவது:

திருக்குறளை கொண்டாடுவது தமிழர்களின் கால கடமை. தமிழ்நாடு என நில அடையாளம் உள்ளது. மொழி, கலை அடையாளங்களும் உள்ளன. தத்துவத்திற்கு அடையாளம் உண்டா என கேட்டால், திருவள்ளுவரை உயர்த்திப் பிடிக்கலாம்.

தலைசிறந்த சமூக அறிவியல் நூல்களாக, கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மாக்கியவல்லியின், "த பிரின்ஸ்" மற்றும் திருவள்ளுவரின் திருக்குறளும் தான் உள்ளன. திருக்குறளின் மேன்மை, அனைவருக்கும் தெரியும். மனித வாழ்க்கைக்குத் தேவையான எண்ணிலடங்கா விஷயங்கள், திருக்குறளில் உள்ளன.

இத்தகைய அரிய திருக்குறளை, தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.