Pages

Friday, January 31, 2014

வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்க, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் என்ற தனி இணையதளம் தொடங்கப்படும்.
என்னென்ன தகவல்கள்? வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள், வேலை பெறுவதற்கான உதவிகள் குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை தமிழகம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.