Pages

Monday, January 20, 2014

செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியை பாதுகாக்கக் கோரி ஆசிரியர், மாணவர்கள் போராட்டம்

அரசு விதிகளை மீறி ராஜா முத்தையா மேல் நிலைப் பள்ளியில் தகுதியில்லாத ஒருவரை தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி ஆசிரியர்களும், மாணவர்களும் போராட் டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு:

ராஜா அண்ணாமலை புரத்தில் அரசு உதவி பெறும் செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் மருமகள் கீதா நிர்வகித்து வருகிறார். ஏழை எளிய மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து ஹரி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் பள்ளியை திறந்துள்ளனர். இந்நடவடிக்கைக்கு அப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.செட்டிநாடு ராஜா முத் தையா மேல்நிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாண வர்களின் எண் ணிக்கை 1200 லிருந்து 900ஆக குறைந்து விட்டது.
எனவே, பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலி யுறுத்தி வந்தனர். இந்நிலை யில், அப்பள்ளியில் பணிபுரியாத ஒருவரை நிர்வாகம் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.“மேல்நிலைப் பள்ளி யில் மாணவர் சேர்க்கையை குறைத்து, பள்ளியை மூட நிர்வாகம் திட்ட மிட் டுள்ளது. அதற்கு ஏதுவாக, அரசு விதிகளை மீறி மேல் நிலைப் பள்ளியில் பணி யாற்றாத ஒருவரை தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர்.
இதனை ஏற்க முடி யாது. 20 ஆண்டுகளுக்கும் மேல் பள்ளியிலேயே பணி யாற்றி வரும் தகுதியான ஒருவரை தலைமை ஆசி ரியராக நியமிக்க வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் மேல்நிலை பள் ளியை மூடும் நடவடிக் கையை கைவிட வேண் டும்” என வலியுறுத்தி ஆசி ரியர்கள் தொடர் உள் ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வெள்ளியன்று (ஜன.17) வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பேசிய சங்கத்தின் தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் ஆர். குமார் “ பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு மாணவர்க ளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல். கல்வி வியாபாரமாவதை தடுக்க வும், ஏழை - எளிய மாணவர் களுக்கு கட்டாயம் கல்வி தர வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறு கிறது. ஆசிரியர்களின் போராட்டத்திற்கு மாண வர்கள் துணை நிற்போம்” என்றார்.
“இப்பிரச்சனை குறித்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணாவிடில் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கி செல்வோம்” என்றும் குமார் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.